Tuesday, September 17, 2013

​ மழை ​மங்கை



மழை ​​
​நின்ற பிறகும் தூறல் போல


              நீ ​​சென்ற பின்னும் நீங்காது உன் நினைவுகளடி


மழைக்கு முன் சூழ்கின்ற மேகங்கள் தானடி

              ​உன் கார்குழலை கண்முன்னே நிறுத்துதடி 

​மழையின்  போது உதிர்கின்ற சிறிய மழைதுளிகள்               
​         உன் அழகிய வெண்பற்களாய் எனக்கே தெரியுதடி 


​மழையினால்  எழுகின்ற மண்வாசம் தானடி

                ​உன் ​பெண்வாசமாய் வந்து என் தேகம் சிலிர்க்குதடி 
​மழையே  நீயும் ஒரு பெண் தானோ
                ​என் பெண்ணே நீ தான் மழையாய் வந்தாயோ …!!!