மழை
நின்ற பிறகும் தூறல் போல
நீ சென்ற பின்னும் நீங்காது உன் நினைவுகளடி
மழைக்கு முன் சூழ்கின்ற மேகங்கள் தானடி
உன் கார்குழலை கண்முன்னே நிறுத்துதடி
மழையின் போது உதிர்கின்ற சிறிய மழைதுளிகள்
உன் அழகிய வெண்பற்களாய் எனக்கே தெரியுதடி
மழையினால் எழுகின்ற மண்வாசம் தானடி
உன் பெண்வாசமாய் வந்து என் தேகம் சிலிர்க்குதடி
மழையே நீயும் ஒரு பெண் தானோ
என் பெண்ணே நீ தான் மழையாய் வந்தாயோ …!!!